தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ஆவணம் மூலம் நிலமோசடி; தந்தை-மகன் கைது - Land fraud by duplicate document in thiruvallur

திருவள்ளூர் : முதல் மனைவியின் மகன் பெயரில் உள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம், இரண்டாவது மனைவியின் மகன் பெயருக்கு மாற்றம் செய்த தந்தையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

land-scam

By

Published : Aug 29, 2019, 8:06 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜகண்டிகை பகுதியில் வசித்து வருபவர் எழிலரசு. இவர் அதே பகுதியில் 42 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்தை எழிலரசுவின் தந்தையான குப்புசாமி என்பவர் போலியான ஆவணங்கள் தயாரித்து அதனை தனது இரண்டாவது மனைவியின் மகன் நந்தகுமார் என்பவரின் பெயருக்கு மாற்றியுள்ளார்.

இதனை அறிந்த எழிலரசு ரூ.35 லட்சம் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் தனது தந்தை மோசடி செய்ததாக, திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் புகார் அளித்தார்.

போலி ஆவணம் மூலம் நிலமோசடி செய்தவர்கள் கைது

இதன் அடிப்படையில் எழிரலசுவின் தந்தை குப்புசாமி மற்றும் அவரது இரண்டாவது மனைவியின் மகன் நந்தகுமார் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details