தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிமராமத்து பணிகளை பார்வையிட்ட ஏரி பாசன விவசாய சங்கத்தினர்!

திருவள்ளூர்: செஞ்சி கைவண்டுர் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை ஏரி பாசன விவசாய சங்கத்தினர், ஊராட்சி நிர்வாகிகள் மேற்பார்வையிட்டனர்.

குடிமராமத்து பணிகள்
குடிமராமத்து பணிகள்

By

Published : Jun 7, 2020, 2:54 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏகாட்டூர் சேலை, பட்டறைபெரும்புதூர், கைவண்டுர் செஞ்சி, உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் பொதுப்பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் தற்போது குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் அந்தந்த பகுதி ஏரி பாசன விவசாய சங்கத்தினர் ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நடக்கிறது. கைவண்டுர் ஊராட்சியில் நடைபெற்று வரும் பணியை அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், ஏரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் அன்பு ஆகியோர் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.
இதேபோல் ஏரிப் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிற்றம் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகி ராஜி ஆகியோர் மேற்பார்வையில் ஏரியின் கரைகளில் சீரமைக்கும் பணிகள் தொடங்கின.

இது குறித்து செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகி ராஜூ கூறுகையில், “ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 40 ஏக்கர் நிலங்களை அரசு மீட்டெடுத்து உள்ளது. செஞ்சி ஏரியின் மூலம் அநேக நீர் பாசனங்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பணிகள் இன்னும் இரு தினங்களில் முடிக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: எட்டு வழிச் சாலைக்கு காட்டும் அக்கறையை, கரோனாவிற்கு காட்டுகள்- விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details