திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரை கிராமத்தில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தி வெங்கடேசன் தொடக்கி வைத்தார். ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்துதல், விவசாயிகளுக்கு தண்ணீர் சீராக போய் சேர்வதற்கு மூன்று கிலோமீட்டர் தொலைவில் கால்வாய் சீரமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது.
திருவள்ளூர் ஏரிகளில் குடிமராமத்து பணி தொடக்கம் - திருவள்ளூர் ஏரிகளில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்
திருவள்ளூர்: கடம்பத்தூர் அருகே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏரிகளில் குடிமராமத்து பணி தொடங்கப்பட்டது.
![திருவள்ளூர் ஏரிகளில் குடிமராமத்து பணி தொடக்கம் Lake development works started in Thiruvallur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-tn-trl-04a-kudimaramathu-pani-thuvakam-vis-10007-03062020184033-0306f-1591189833-856.jpg)
Lake development works started in Thiruvallur
இதில் அரசு அலுவலர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் உதவிப் பொறியாளர் லோக ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஏரி சீரமைக்கப்படுவதால் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உழவு செய்வதற்கு பயன் அடையும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதை வரவேற்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த குடிமராமத்துப் பணி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.