தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவறான சிகிச்சையால் கூலித்தொழிலாளி உயிரிழப்பு, மருத்துவமனைக்கு சீல் - மருத்துவ சிகிச்சை

திருநின்றவூர் அருகே தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையினாலும், அதிகமாக பணம் வசூலித்ததினாலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மருத்துவமனையை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

labour death due to mis-treatment Collector sealed the hospital Tiruvallur district news Tiruvallur latest news திருவள்ளூர் மாவட்ட செய்திகள் தவறான சிகிச்சையால் கூலித்தொழிலாளி உயிரிழப்பு தனியார் மருத்துவமனைக்கு சீல் கூலித்தொழிலாளி தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையினாலும் மருத்துவ சிகிச்சை சீல்
labour death due to mis-treatment Collector sealed the hospital Tiruvallur district news Tiruvallur latest news திருவள்ளூர் மாவட்ட செய்திகள் தவறான சிகிச்சையால் கூலித்தொழிலாளி உயிரிழப்பு தனியார் மருத்துவமனைக்கு சீல் கூலித்தொழிலாளி தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையினாலும் மருத்துவ சிகிச்சை சீல்

By

Published : Jan 20, 2021, 2:47 AM IST

திருவள்ளூர்: வேப்பம்பட்டு, பஜ்ரங் கல்லூரி சாலையை சேர்ந்தவர் ராகவன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இதற்கிடையில், ராகவன் விரை வீக்கம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து கடந்த ஜூன் 6ஆம் தேதி திருநின்றவூர், சி.டி.எச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அப்போது மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை செய்வதற்கு ரூ. 25ஆயிரம் கட்டணத்தை கேட்டுள்ளனர். இதனையடுத்து, ராகவனும் நிர்வாகம் கேட்ட கட்டணத்தை செலுத்தி விட்டார். பின்னர், அவர் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் போது கூடுதலாக ரூ. 23,500ஐ செலுத்தக்கோரி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

அப்போது, அவர், தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் ராகவனையும், அவரது மனைவி நந்தினியையும் தரக்குறைவாக பேசியும், சாதி பெயரை சொல்லி திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நிர்வாகம் ராகவனை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பாமல் மருத்துவமனையில் சிறை வைத்துள்ளனர்.

இதோடு மட்டுமல்லாமல், நாங்கள் கேட்ட பணத்தை செலுத்தாவிட்டால் உங்கள் குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகார் செய்யப்படும் என நிர்வாகத்தினர் மிரட்டியுள்ளனர். மேலும், மருத்துவமனை நிர்வாகம் ராகவனின் இரு சக்கர வாகனத்தையும் பறித்து வைத்து கொண்டு உள்ளனர். பின்னர், நிர்வாகம் அவரை மருத்துவமனையிலிருந்து விடுவித்துள்ளனர்.

இதன்பிறகு, ராகவனின் உடல்நிலை மோசமானதை அடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி ராகவன் கடந்த ஜூலை 27ஆம் தேதி உயிரிழந்தார்.

இது குறித்து நந்தினி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தார். பின்னர், அவர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் பிரித்தி பார்கவி விசாரணை மேற்கொண்டார். இதன் பிறகு, வருவாய் அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து ராகவனின் இரு சக்கர வாகனத்தை மீட்டு நந்தினியிடம் ஒப்படைத்தனர்.

மேலும், அலுவலர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டபோது, அவர்கள் பதிவு ஏதும் இல்லை எனவும் தெரிவித்தனர். மேலும், மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தி நோயாளிகளிடம் பணத்தொகையை செலுத்த வற்புறுத்தியும், இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டு வந்து உள்ளது.

மேலும், ராகவனுக்கு அறுவை சிகிச்சைக்கு பின் எவ்வித பரிசோதனை மேற் கொள்ளாமல் நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளதாகவும், மருத்துவமனையின் உரிமையாளர் மேற்படி நோயாளிக்கு முறையான டிஸ்சார்ஜ் விபரங்களை வழங்காமலும், அறுவை சிகிச்சைக்கு பின் மேற்கொள்ள வேண்டிய தொடர் பரிசோதனை செய்யாமலும், தனது பணியில் தவறி உள்ளதாகவும் தெரியவந்தது. மேற்கண்ட விபரங்களில் அடிப்படையில், மருத்துவ சிகிச்சை தொகை செலுத்தாத நிலையில், ராகவனை மருத்துவமனையில் இருந்து விடுவிக்காமலும், இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டதும், மிகவும் காலதாமதமாக டிஸ்சார்ஜ் செய்தது உள்ளிட்ட தவறான நடவடிக்கைகளுக்காக மருத்துவமனையை பூட்டி சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார்.

இதன்படி நேற்று திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் பிரித்தி பார்கவி, ஆவடி தாசில்தார் செல்வம் ஆகியோர் மேற்கண்ட மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர், அலுவலர்கள் அங்கிருந்த உள் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்தனஎ. பின்னர், அலுவலர்கள் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவம் திருநின்றவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சை? - தாய், சேய் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details