தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் பதுக்கியிருந்த 1.5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்: விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை! - திருவள்ளூர் குட்கா பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1.5 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

_kutka_parimuthal

By

Published : Aug 27, 2019, 9:57 AM IST

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.5 டன் குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது ஒரு வீட்டில் ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட இருவரை, கும்மிடிபூண்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தமிழகத்தில் புழக்கத்தில் விடும் குட்கா வியாபாரிகள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details