குன்றத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் (சிட்டி யூனியன் பேங்க்) பாண்டியன் என்பவர் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் வங்கியில் நகை கடன் பெறும் வாடிக்கையாளர்களிடம் பேசி தனக்கு கஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் நகைகளை வங்கி கணக்கில் வைத்து வைத்து பணம் பெற்றுதரும்படி வாடிக்கையாளர்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
வங்கி ஊழியர் என்ற காரணத்தால் அதனை நம்பி வாடிக்கையாளர்கள் அவரது நகைகளை அடகுவைத்து பணம் தந்துள்ளனர். இந்நிலையில், இந்த வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் போலி எனவும் உடனடியாக அதற்கான பணத்தை கட்ட வேண்டும் எனவும் வாடிக்கையாளர்களுக்கு வங்கியிலிருந்து கடிதம் வந்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், வங்கிக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது, நகை மதிப்ட்டாளர் தலைமறைவாகிவிட்டார் என்பது தெரிவர அவர் மீது குன்றத்தூர் காவல் நிலையத்தில் மீது புகார் அளித்தனர்.
வங்க அப்ரைசர் மீது மோசடி வழக்கு இதுவரை புகழ்வேந்தன், தனசெயன் ஆகியோர் புகார் அளித்துள்ள நிலையில், சுமார் 22 பேரின் வங்கி கணக்கில் போலி நகைகளை வைத்து சுமார் ரூ. 54 லட்சம் வரை பாண்டியன் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க : 'இனி எம்பிபிஎஸ் தேர்வுகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும்' - துணைவேந்தர் சுதா சேஷய்யன்