திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சுமார் 158 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதற்கான பூமி பூஜை இன்று (ஜூன் 24) நடைபெற்றது. இதில், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு தலைவர் சிவகுமார், நகர செயலாளர் சேகர், பொதுப்பணித்துறை பாசன உதவியாளர் கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன் மூலம் சுமார் 1,227 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறவுள்ளன.
கும்மிடிப்பூண்டி பெரிய ஏரி தூர்வாரும் பணி தொடக்கம் - ஏரி தூர்வாறல்
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரி தூர்வாரும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.

குடிமராமத்து பணிகள்
இதையும் படிங்க:திருவாரூரில் குடிமராமத்துப் பணிகள் 80 விழுக்காடு நிறைவு!