தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்டலேறு அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிருஷ்ணா நீர் இன்று திறப்பு! - Krishna Water

ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கால்வாய் மூலமாக கிருஷ்ணா நீர் 1500 கன அடி நீர் இன்று காலை 9 மணிக்கு திறக்கப்படுகிறது.

Krishna
Krishna

By

Published : Sep 18, 2020, 3:14 AM IST

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து, பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் கண்டலேறு அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு சாத்தியப்படவில்லை. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை ஒரே தவணையில் சாதனை அளவாக 8.60 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வந்து சேர்ந்தது.

அதன் பின்னர், கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. நீர் வரத்து இல்லாத காரணத்தால் பூண்டி ஏரி வறண்டு காணப்படுகிறது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி தண்ணீர் திறந்து விட கோரி தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து கடந்த 14ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர பொதுப்பணித்துறை அலுவலர்கள் உறுதி அளித்தனர்.

ஆனால் நேற்று இரவு வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கிருஷ்ணா நதிநீர் இன்று காலை 9 மணி அளவில் 1500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது என்று ஆந்திர அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 16.75 அடியாக பதிவானது. வெறும் 63 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை. ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட உள்ளதால் கிருஷ்ணா கால்வாய் முழுவதுமாக பாதுகாப்பு பணியில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:ஆடிப்பாடி உற்சாகமாக நாத்து நட்ட விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details