தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின்கீழ் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இம்முறைக்கான கோமாரி நோய் கட்டுப்பாட்டு தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது மத்திய அரசின் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்கீழ் முதல் சுற்று கால் மற்றும் வாய் கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்டம் நேற்று பூண்டி ஒன்றியம் மோவூர் ஊராட்சியில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் வித்யா தொடங்கிவைத்தார்.
இதில் மோவூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை அழைத்துவந்து தடுப்பூசி போட்டனர்.
கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது இந்நிகழ்ச்சி குறித்து கோட்டாட்சியர் வித்யா பேசுகையில், 'திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 661 எருமை இனம், 47 ஆயிரத்து 439 உட்பட மொத்தம் மூன்று லட்சத்து 100 கால்நடைகளுக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, துணைத்தலைவர் மொராஜி, ஊராட்சி செயலாளர் சந்திரசேகர், வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி ஞானசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.