திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் உள்ள விநாயகர் கோயில் தெருவில் அங்கன்வாடி மையம் அமைந்திருக்கிறது. சிமெண்ட் மேற்கூரைப் போடப்பட்டு தனியார் கட்டடத்தில் இயங்கிவரும் இந்த சிறிய அங்கன்வாடியில், அடிப்படை வசதியான குடிநீர் கூட இல்லாததால் கோடை வெப்பத்தில் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கன்வாடியில் குழந்தைகள் அவதி! - lack of facilities in anganwadi
திருவள்ளூர்: திருத்தணியில் இயங்கிவரும் அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுக்கு குடிநீர் வசதி கூட இல்லாததால், அவர்கள் கோடைகாலத்தில் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கன்வாடியில் குழந்தைகள் அவதி!
அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கன்வாடியில் குழந்தைகள் அவதி!
மேலும், பிற்பகல் நேரங்களில் புழுக்கத்தில் அவதியுற்று குழந்தைகள் சோர்வடைந்து விடுவதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட துறையின் அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தைகளின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.