திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் அதானி துறைமுக விரிவாக்க திட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை முன்னிட்டு மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதன் உண்மைத்தன்மை குறித்து காட்டுப்பள்ளி பகுதிக்கு திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி, காட்டுப்பள்ளி துறைமுகம், காட்டுப்பள்ளி பகுதிகளுக்கு சென்று கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்ததை உறுதி செய்து கொண்டபின் ஊராட்சி மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது கிராம மக்கள், எங்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. அதானி துறைமுகம் கண் துடைப்புக்காக இலவச சைக்கிள்கள் கொடுத்து கணக்கு காட்டுகிறார்கள். எங்களுக்கு திமுக ஆட்சி வந்தால்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறினர்.
கார்த்திகேய சிவ சேனாதிபதியுடன் சுற்றுச்சூழல் நிர்வாகிகள், தொழில்நுட்பத் துறை நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் டிஜே கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ், காட்டுப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சேதுராமன் ஒன்றியக்குழு தலைவர் ரவி உள்ளிட்ட ஏராளமானோர் அவருடன் உடன் சென்று பார்வையிட்டு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் மூடப்பட்ட பாரதி பூங்காவை தடையை மீறி திறந்த அமைச்சர்!