திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் இளைஞர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து இளைஞரை பிடித்து ஆரணி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அந்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர் கர்நாடக மாநிலம் சின்ன பள்ளம் மாவட்டம் உவரி வாழக்காய் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சப்பர் என்பவரது மகன் வெங்கடேசன் என்பதும் தெரியவந்தது.