தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொண்டாட்டம் - திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொண்டாட்டம்
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொண்டாட்டம்

By

Published : Nov 10, 2021, 9:56 AM IST

Updated : Nov 10, 2021, 10:48 AM IST

திருவள்ளூர்: முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாகப் போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 5-ம் தேதி கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியது. தினமும் மூலவருக்குச் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு வைர, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கொண்டு வந்த ஒரு டன் மலர்களால் சண்முகருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி நடைபெற்று மஹா தீபாராதனை செய்யப்பட்டது.

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா

பக்தர்கள் காவடி மண்டபத்தில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரிசையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் - நவம்பர் 10

Last Updated : Nov 10, 2021, 10:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details