திருவள்ளூர்: சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்கப் பொதுக்கூட்டமானது திருவள்ளூர் ரயில் நிலையத்தில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று தலைமை உரை நிகழ்த்திய பின் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "ஒன்றியத்தில் இருக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும். யாரெல்லாம் தங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கிறார்களோ அவர்களின் பேச்சு சுதந்திரம் கருத்துரிமையைப் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.
குஜராத்தில் நடந்ததை பற்றி ஆவணப்படம் வெளியிட்டதற்காக பிபிசி ஊடகம் மீது ஒன்றிய அரசு வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளதாகவும். அதை மறுத்து அவர்கள் மீது வழக்குப் போடலாம் அல்லது அது உண்மை இல்லை என்று விளக்கம் அளிக்காமல். ஆனால் அதற்கு எதிர் மாறாக வருமானவரித்துறை சோதனை நடித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றார். இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்லுகின்ற காலம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாஜக ஒன்றிய அரசுக்குப் பாடம் புகட்டுவார்கள் எனக் கூறினார்.