திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை, சூலமேனி, பாலவாக்கம், தண்டலம் உள்ளிட்ட 16 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் குடிப்பதற்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் துபாய் தமிழ் சங்கத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதை ரெட் கிராஸ் அமைப்பு அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகித்து வருகிறது.
மரக்கன்று நட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பரப்புரை - awarness campaign
திருவள்ளூர்: குடிநீர் பஞ்சம் நிலவும் சூழலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு துபாய் தமிழ் சமூகத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு பிரச்சாரம்
விழிப்புணர்வு பிரச்சாரம்
மேலும், இது குறித்து மாணவர் முரளிதரன் கூறுகையில், " திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாகக் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருவதால் மழை தரும் மரங்களை வளர்க்கும் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டும் ஓவியங்களைத் தீட்டியும் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டோம். இது போல அனைத்து பள்ளி மாணவர்களும் மரங்கள் நட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.