’ஜல் சக்தி அபியான்’ நீர் மேலாண்மை திட்டம் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், கல்வி அலுவலர் முனி சுப்புராயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மழை நீர் சேகரிப்பில் மாணவர்கள் கின்னஸ் சாதனை!
திருவள்ளூர்: மழை நீரை சேமிப்பது போன்ற வடிவத்தில் இரண்டாயிரம் மாணவர்கள் அமர்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
உலக சுற்றுச்சூழலை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் மழை நீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நடைபெற்றது. அது தொடர்பாக பள்ளி மைதானத்தில் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், மழை நீரை சேமிப்பது போன்ற வடிவத்தில் இரண்டாயிரம் மாணவர்கள் அமர்ந்து ”அமேசிங் வேர்ல்ட் ரெக்கார்ட்” நிறுவன பதிவு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், நீர் மேலாண்மை குறித்தும், நீரின் அவசியம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பள்ளி மாணவர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து நீரை சேமிப்பது குறித்து பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.