திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வேப்பம்பட்டு தனியார் கல்லூரிகளில் வாக்கு எண்ணும் மையத்தில் அனுப்பி வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன - அரவிந்தன் இதையடுத்து, வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நேரில் பார்வையிட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
மேலும், துணை ராணுவப்படை தமிழ்நாடு காவல் துறை மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறை என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில், 'பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. வெளியாட்கள் உள்ளே வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வளாகத்திற்குள்ளேயும் வளாகத்திற்கு வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு எண்ணப்படும் மே இரண்டாம் தேதி வரை, இந்த பாதுகாப்புப் பணிகள் எந்தத் தொய்வும் இன்றி தொடரும். சிசிடிவி கேமரா மூலம் அனைத்துப் பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன’ என்று கூறினார்.
இந்த ஆய்வுப்பணியின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் உள்ளிட்ட ஏராளமான காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை