தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் - அமைச்சர் பாண்டியராஜன்

திருவள்ளூர்: கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் ஜனவரி மாதம் தொடங்கப்படும் என தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

By

Published : Nov 24, 2019, 2:38 AM IST


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் கீழ் இரண்டு ஆயிரத்து 444 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம், தையல் இயந்திரம், முதியோர் உதவித்தொகை ஆகிய திட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'தமிழ்நாட்டில் கீழடி, தூத்துக்குடியில் நான்கு இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படும் எனவும் தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி பணிகளில் மாணவர்கள், பேராசிரியர்கள் சிறப்பாக ஆர்வம் காட்டுகின்றனர்' எனவும் தெரிவித்தார்.

முதலமைச்சரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நிகழ்ச்சியில் திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் நரசிம்மன், மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: பாலில் நச்சுத்தன்மை மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ - ராஜேந்திர பாலாஜி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details