திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெருவாயில் காலணி பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் ராஜாமணி (வயது 20). நிவர் புயலின் காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி ஆற்றில் குளிக்க தடைவிதித்து காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 27) ராஜாமணி தடையை மீறி தன் ஐந்து நண்பர்களுடன் புதுவாயில் அருகேயுள்ள ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.