திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி கலந்துகொண்டு பேசினார்.
திமுக வெற்றிபெற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும்! - Indian Union Muslim League support dmk
திருவள்ளூர்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதன் தோழமைக் கட்சிகள் வெற்றிபெற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
அதில் அவர், "இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், திமுக உடன் தொடர்ந்து கூட்டணியில் இருக்கும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதன் தோழமைக் கட்சிகள் வெற்றிபெற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் அயராது பாடுபட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திமுக எம்எல்ஏ பூங்கோதையின் பதவியை பறிக்க வேண்டும் - பேரவைத் தலைவருக்கு முஸ்லிம் லீக் கடிதம்!