இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, இந்தியன் ஆயில் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் வெடிகுண்டு மிரட்டல் மற்றும் அதை கையாளும் ஒத்திகை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட காவல் துறையைச் சார்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாதுகாப்பு குறித்து தொழிலாளர்களுக்குப் பயிற்சியளித்தனர்.
இந்த ஆலையின் இணைப் பொது மேலாளர் எஸ்.குமார் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வெடிகுண்டு நிபுணர்கள் குழுத் தலைவர் மேகநாதன் பயிலரங்கில் குழுமியிருந்த தொழிலாளர்களுக்கு வெடிகுண்டு குறித்த, பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார். அப்பொழுது வெடிகுண்டு குறித்து அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் தரப்பட்டது.