தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. எனினும் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு வங்கிகள், அரசுத் துறைகள், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்தது.
ஏற்கனவே 144 தடை உத்தரவால் வருமானத்தை இழந்து முடங்கிக் கிடக்கும் மக்கள் தங்களின் அவசரத் தேவைக்காக பணம் எடுக்க வங்கிக்கு வருகின்றனர். ஏடிஎம் சேவை மையங்கள் வேலை செய்யாமல் முடங்கிக் கிடப்பது இதற்கு முக்கிய காரணமாகும்.
வங்கி ஊழியர்களின் அலட்சியப் போக்கு - நடவடிக்கை எடுக்குமா அரசு? இந்த நிலையில் வங்கிக்கு வரும் பொதுமக்களை வங்கியினுள் விடாமல், வங்கிக்கு வெளியே கடுமையான வெயிலில் நிற்க வைப்பதுடன், தனி நபர் இடைவெளி விட்டு நிற்க வழி செய்யாமல் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். இதுகுறித்து கேட்டால், 'நீ உள்ளே வருவதால் எனக்கு வைரஸ் தாக்குதல் ஏற்படும். அதனால் வெளியே நின்று பணத்தை வாங்கிச் செல்' என்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே வங்கி உயர் அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:அலட்சியத்தோடு சுற்றித் திரியும் வாகன ஓட்டிகள் - போலீஸ் எச்சரிக்கை