திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மனம் வீடு பகுதியில் 3 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அதை திறக்கும் நிகழ்ச்சியை மேல்மனம் பேடு ஊராட்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சத்யபிரியா முரளிகிருஷ்ணன் ஏற்பாடு செய்து தலைமையேற்றார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்காணிப்பு அதிநவீன கேமராக்களை இயக்கி தொடங்கி வைத்தார்.
பின் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 5000 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 10,000 கண்காணிப்பு கேமரா பொருத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் நேற்று (டிச.19) இரவு ஆந்திரா ஏடிஎம் கொள்ளையர்கள் குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த கண்காணிப்பாளர் ரகசிய தகவலின் அடிப்படையில் வடக்கு மண்டல காவல் தலைவர் சாமுண்டீஸ்வரி உத்தரவின்படி கொள்ளையர்களை சுற்றிவளைத்து பிடித்ததோடு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
திருவள்ளூரில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்காணிப்பு கேமரா! - திருவள்ளூரில் அதிநவீன கண்காணிப்பு கேமரா
திருவள்ளூரில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்காணிப்பு கேமராவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்துவைத்தார்.
ரூ. 3 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்காணிப்பு கேமரா
இந்நிகழ்வில், திருவள்ளூர் மாவட்ட துணை காவல் துறை கண்காணிப்பாளர் துரை பாண்டியன் வெள்ளவேடு காவல் ஆய்வாளர் சோபா தேவி ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:ஹைதராபாத் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் திருவள்ளூரில் கைது!