தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 1, 2020, 8:48 PM IST

ETV Bharat / state

விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து மறியல்: 50க்கும் மேற்பட்டோர் கைது!

திருவள்ளூர்: டெல்லியில் விவசாயிகளின் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து மறியல்: 50க்கும் மேற்பட்டோர் கைது!
விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து மறியல்: 50க்கும் மேற்பட்டோர் கைது!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்டங்களை இயற்றிய மத்திய அரசை கண்டித்து தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

விவசாயிகளை ஒடுக்கும் வகையில் தடியடி நடத்தியும், குண்டு வீசியும் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும் மறியலில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து மறியல்: 50க்கும் மேற்பட்டோர் கைது!

அதுமட்டுமின்றி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட பிரதமர் மோடியின் உருவ படத்தை காலணியால் அடித்தும், கீழே போட்டு மிதித்தும் போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க...விவசாயிகள் போராட்டம்: பாஜக தலைவர் வீட்டில் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details