திருவண்ணாமலை மாவட்டம் மேலூர் கிராமத்தைச் சேர்ந்த லதா என்பவரது மகன் சக்திவேல்(17) 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை என்பதால் சென்னை செங்குன்றத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன் வந்திருந்தார்.
திருவள்ளூரில் லாரி மோதி இளைஞர் பலி - திருவள்ளூர் லாரி விபத்து
திருவள்ளூர்: செங்குன்றத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் மீது லாரி மோதியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.
![திருவள்ளூரில் லாரி மோதி இளைஞர் பலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3418148-thumbnail-3x2-lorry.jpg)
இந்நிலையில் இன்று அருகில் உள்ள ஓட்டலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, செங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் தன் கட்டுபாட்டை இழந்ததால் சாலையில் வாகனத்தோடு விழுந்துள்ளார், இதனிடையே பின்னால் வந்த லாரி அவர் மீது மோதி தலையில் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.