தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் தொழிற்சாலையில் 100 பேர் நீக்கம்; போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்! - 100 workers fired

திருவள்ளூர்: கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நிரந்தரப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை பணியிலிருந்து திடீரென நீக்கியதால் அவர்கள் நேற்று இரண்டாவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கார் தொழிற்சாலையில் 100 பேர் பணி நீக்கம்: ஊழியர்கள் போராட்டம்

By

Published : May 5, 2019, 7:45 AM IST

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் எச்.எம்.எஃப்.சி.எல். எனப்படும் கார் உதிரி பாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக 20-க்கும் மேற்பட்டோர் நிரந்தரப் பணியாளர்களாக வேலை செய்துவந்துள்ளனர்.

அந்த நிறுவனத்தின் பெருமளவு பங்குகள் ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் விற்கப்பட்டதால் முதல் கட்டமாக நிரந்தரப் பணியாளர்களாக உள்ள அலுவலக ஊழியர்களை வெளியேற உத்தரவிடப்பட்டது. தொழிற்சாலையின் 76 விழுக்காடு பங்குகளை ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு அண்மையில் விற்பனை செய்த போதிலும், மீதமுள்ள 24 விழுக்காடு பங்குகளை எச்.எம்.எஃப்.சி.எல். நிறுவனம் வைத்துள்ளது.

இந்த நிலையில் ஊழியர்களுக்கு பணி மாற்றம் செய்து தருவதாக உறுதி அளித்திருந்த நிலையில் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துக்கு பெருமளவு பங்குகளை விற்பனை செய்ததால் நிரந்தரப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து விலக வேண்டுமென நிறுவன நிர்வாகம் வலியுறுத்திவருகிறது. இதனால் நான்கு ஆண்டுகள் முதல் 22 ஆண்டுகள் வரை பணிபுரிந்தவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

அதே நிறுவனத்தில் பணிபுரிய வழி செய்ய வேண்டும் என ஊழியர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரைச் சந்தித்துக் கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதைத் தொடர்ந்தும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தங்களது முடிவை கைவிடாததால் ஊழியர்கள் மே 3ஆம் தேதி இரவு முதல் தொழிற்சாலைக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், "நிறுவன நிர்வாகம் நேரடியாக எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் இந்த வளாகத்திலேயே உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிரை விடுவோம்" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details