தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”நீட் தேர்விற்கு விலக்கு அளிக்காமல் ஆளுநர் உறங்குகிறார்” : எம்பி ஜெயக்குமார் விமர்சனம்

திருவள்ளூர் : தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உறங்குவதாகவும், அவர் விழிக்கும்போது பதிலளிப்பார் என்றும் எம்பி ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்காமல் ஆளுநர் உறங்குகிறார்
தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்காமல் ஆளுநர் உறங்குகிறார்

By

Published : Oct 24, 2020, 5:55 PM IST

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், இதனை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் இன்று (அக.24) நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் விரைந்து பணிகளை முடிக்க அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்காமல் ஆளுநர் உறங்குகிறார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவர் கண் விழித்தவுடன் பதில் கூறுவார்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏஜி சிதம்பரம், வடக்கு மாவட்ட செயலர் ஜேபி ஜெயபிரகாஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 7.5% இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு அனுமதியளிப்பாரா ஆளுநர்? தள்ளிப்போகும் கலந்தாய்வு!

ABOUT THE AUTHOR

...view details