தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துப்பாக்கி முனையில் வழப்பறி செய்த இருவர் கைது! - வழிப்பறி

திருவள்ளூர்: காரில் வந்து கத்தியை காட்டி, துப்பாக்கி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

arrest

By

Published : Sep 14, 2019, 8:48 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காயலார் மேடு பகுதியைச் சேர்ந்த அருண், நாகராஜ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த கும்பல் இருவரிடமும் கத்தியைக் காட்டி துப்பாக்கி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில் காரில் வந்து இருவரிடம் கத்தியை காட்டி துப்பாக்கி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தினேஷ், சுண்ணாம்பு குளத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்த சிப்காட் போலீசார் இரண்டு கை துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள், கார், செல்ஃபோன், ரூ.1700 பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இவர்களுக்கு கை துப்பாக்கிகள் எப்படி வந்தது, மற்ற வழிப்பறி கும்பலோடு தொடர்புடையவர்களா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details