திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் தனியார் இரும்பு உருக்கு ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலைக்கு 20 டிராக்டர்கள் மூலம் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி சிலர் விற்பனை செய்வதாக வட்டாட்சியர் மகேஷிடம் அக்கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்துள்ளனர்.
ஆனால், இது குறித்து மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து தண்ணீர் கடத்தல் நடைபெற்றுவந்தது. இதனை எதிர்த்து கிராம மக்கள் இரும்பு உருக்கு ஆலை நுழைவுவாயில் அமர்ந்து நேற்று (ஜூன் 22) போராட்டம் செய்துவந்தனர். இதனால், அந்தக் கடத்தல் கும்பல் பகல் நேரத்தில் தண்ணீர் கடத்துவதைத் தவிர்த்துவிட்டு, நள்ளிரவில் ஆலைக்குள் நுழைய முயற்சித்தனர்.
டிராக்டர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள்