தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வெற்றி பெற்றால் அதானி துறைமுக விரிவாக்கப் பணியினை தடை செய்வேன்' - அமமுக வேட்பாளர் பேச்சு! - திருவள்ளூர் அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : பொன்னேரி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்.ராஜா மேற்கொண்ட பரப்புரையில், 'நான் மீண்டும் வெற்றி பெற்றால் மக்களோடு மக்களாக சேர்ந்து பல போராட்டங்களை நடத்தி, அதானி துறைமுக விரிவாக்கப் பணியினை தடை செய்வேன்' என்றார்.

மீனவர்களுடன் கலந்துரையாடிய அமமுக வேட்பாளர்
மீனவர்களுடன் கலந்துரையாடிய அமமுக வேட்பாளர்

By

Published : Apr 1, 2021, 7:46 PM IST

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன். ராஜா, பழவேற்காடு பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். கோட்டக்குப்பம் பகுதியில் மீனவர்களுடன் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தார்.

பரப்புரையில் ஈடுபட்ட பொன்.ராஜா பேசுகையில், 'என்னை மீண்டும் நீங்கள் வெற்றிபெறச் செய்தால், அடிப்படை வசதிகளை செய்து தருகிறேன்.

அதானி துறைமுக விரிவாக்கப் பணியினை தடுக்கும் வகையில், மக்களோடு மக்களாகப் போராட்டங்களை நடத்தி, அதனை முற்றிலுமாக அகற்றப்பாடுபடுவேன். இதனால் இந்தப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதுகாக்கப்படும்’ என்றார்.

இதையும் படிங்க:4 ஆண்டு சிறை ரூ.100 கோடி அபராதத்துடன் தமிழ்நாடு வெற்றிநடைபோடுகிறது - ப. சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details