தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எப்போதும் அனுமதியில்லை' - அமைச்சர் ஜெயக்குமார் - திருவள்ளூர் மாவட்டம் புழல்

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எப்போதும் அனுமதியில்லை என்பதே அரசின் நிலைப்பாடு என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Nov 20, 2020, 5:28 PM IST

திருவள்ளூர் மாவட்டம் புழலில் உள்ள மாதவரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வடசென்னை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (நவம்பர் 20) நடைபெற்றது. ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த கட்டடத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், ஆட்சியர் சீத்தாலட்சுமி ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எப்போதும் அனுமதியில்லை என்பதே அரசின் நிலைப்பாடு என்றும், மாநில அரசின் ஒப்புதலின்றி எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என்றும் கூறினார். கரோனா காலத்தில் இருந்ததை விட தற்போது 40 விழுக்காடு ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், வணிகர்கள் தங்களது கடைகளுக்கு வரி ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அந்தந்த துறை அலுவலர்களிடம் முறையிட வேண்டும் என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார்

தொடர்ந்து பேசிய அமைச்சர், ஊர்வலம் போன்றவற்றுக்கு தடை விதித்துள்ளதால் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதாகவும், சட்டத்தை மீறி வேல் யாத்திரை நடத்தும் பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், வேல் யாத்திரை விவகாரத்தில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details