திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள குன்னமஞ்சேரி பகுதியில் ஐதராபாத் ஜமீனுக்கு சொந்தமான இடம் உள்ளது. ஏற்கனவே, 1968ஆம் ஆண்டு அப்பகுதியில் வசித்த 33 இந்துக்களுக்கு ஐதராபாத் ஜமீன் சுபான் சாயிபு, கிரயம் செய்து கொடுத்தார். அந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் என்பவர் தர்காவிற்கு சொந்தமான இடம் என்று கூறி கொடி கட்டியுள்ளார்.
உணவு சமைத்து உண்ணும் விநோத போராட்டம்! - ஐதராபாத்
திருவள்ளூர்: ஐதராபாத் ஜமீனுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் உணவு சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உணவு சமைத்து உண்ணும்
இதுகுறித்து, பலமுறை புகாரளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் ராஜசேகர் தலைமையில் இந்து அமைப்பினர் உணவு சமைத்து உண்ணும் விநோத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி ஆகியோர் போராட்டத்தைக் கைவிடக்கோரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.