தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுவுக்கு பணம் கேட்டு கணவன் தகராறு: குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை - avadi

திருவள்ளூர்: மது அருந்த பணம் கேட்டு கணவன் தகராறு செய்ததால் இரு குழந்தைகளை கொன்று, தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருநின்றவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃப்ட்ச
ட்ஃபச்

By

Published : Jul 19, 2021, 1:04 AM IST

Updated : Jul 19, 2021, 1:29 AM IST

ஆவடி அருகே திருநின்றவூர் நடுக்குத்தகை, திலீபன் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் பெயிண்டராக வேலை செய்கிறார். இவரது மனைவி கௌரி (24). இவர்களுக்கு திருமணமாகி 4ஆண்டுகள் ஆகின்றன. தம்பதிக்கு தீஷித்தா (3 வயது) என்ற மகளும், அஸ்வின் (ஒன்றரை வயது) என்ற மகனும் உண்டு. ரமேஷ் குடிப்பழக்கம் உடையவர். இதற்கிடையில், ரமேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும், இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கௌரியிடம் தகராறு செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் கௌரி ஏலச்சீட்டு எடுத்து வைத்திருந்த பணத்தில் இருந்து மது அருந்த ரமேஷ் நேற்று பணம் கேட்டுள்ளார். அதற்கு கௌரி மறுத்துவிட்டதாக் தெரிகிறது. இதனால் மனைவியிடம் தகராறு செய்துவிட்டு வீட்டைவிட்டு சென்றுவிட்டார் ரமேஷ்.

கணவரின் குடிப்பழக்கத்தால் ஏற்படும் தகராறை நினைத்து விரக்தியடந்த அவர், தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கிடையில், தற்செயலாக வீட்டு கீழ்த்தளத்தில் வசிக்கும் மைத்துனர் ராஜேஷ், கௌரி மற்றும் குழந்தைகளை பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவர்கள் மூவரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், ராஜேஷின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அதன்பிறகு, அவர்கள் தூக்கில் தொங்கிய கௌரி மற்றும் இரு குழந்தைகளை மீட்டு, ஆட்டோ மூலமாக திருநின்றவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே 3 பேரும் இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உடல்களை உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

Last Updated : Jul 19, 2021, 1:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details