திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட சிற்றம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் எட்டியப்பன். இவருக்கு சோனியா (35) என்ற மனைவியும் உண்டு. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், தனது கணவருக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அடிக்கடி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.
இதனையடுத்து இருவருக்கும் இடையேயான சண்டை நேற்று முற்றவே, சோனியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது வீட்டாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, சோனியாவின் பின் தலையில் பயங்கர காயத்துடன், அங்கிருந்த சுவற்றில் ரத்தக்கரையாகவும், இரண்டு கிலோ எடைக்கல் ஆகியவற்றில் ரத்தக்கறை படிந்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து சோனியாவின் உறவினர்கள் கடத்தூர் காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர். தகலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்பத் தகராரில் மனைவியை கொலை செய்த கணவர் இதனையடுத்து, சோனியாவின் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், அவரது கணவர் எட்டியப்பன், மாமனார் கங்காதரன், மாமியார் ரவி அம்மாள் ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அப்பெண்ணின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதையடுத்து, அங்கு வந்த திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞர்கள் கைது