திருவள்ளூர்: பாடியநல்லூரைச் சேர்ந்தவர்கள் லட்சுமணன் - லோகேஸ்வரி தம்பதி. எடப்பாளையம் பகுதியில் உள்ள ராஜ்குமார் என்பவரின் வெல்டிங் கடையில் லட்சுமணன் வேலை பார்த்துவந்துள்ளார்.
ராஜ்குமாருக்கும் லோகேஸ்வரிக்கும் திருமண பந்தத்திற்கு வெளியேயான உறவு இருந்துவந்ததாகவும் இதனை லட்சுமணன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெல்டிங் கடைக்கு லட்சுமணன் சென்றுள்ளார். அங்கு ராஜ்குமார், லோகேஸ்வரி ஆகியோர் பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனால் கோபமடைந்த லட்சுமணன் இருவரையும் அரிவாளால் வெட்டினார்.