திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் துணை ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் சீருடை அணியாத காவலர்கள் ஒரு இளைஞரைத் தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பானது.
இளைஞரைத் தாக்கும் காணொலியால் எஸ்.பி.,-க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்! - காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு எதிராக மனித உரிமை நோட்டீஸ்
திருவள்ளூர்: மீஞ்சூர் பகுதியில் டாஸ்மாக் கடையில், மது வாங்க வந்த இளைஞரைத் தாக்கும் காணொலி எதிரொலியாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Human Rights Commission has issued notice
இதனைத் தொடர்ந்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தானாக முன்வந்து இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும் மூன்று வாரத்திற்குள் விளக்கம் தருமாறும் அதில் கூறியுள்ளார்.
TAGGED:
Thiruvallur district news