அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் விரிவு மாந்தோப்பு மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மலர்வண்ணன்(31). இவரது மனைவி திவ்யா(28). இருவரும் அம்பத்தூர் சி.டி.எச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு பணிக்குச் சென்றனர். பணி முடிந்து இருவரும் இரவு வீட்டுக்கு செல்லாமல், அம்பத்தூரில் உள்ள திவ்யாவின் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அம்பத்தூரில் டாக்டர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை - கண்காணிப்பு கேமரா காட்சிகள்
சென்னை: டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பின்னர் இன்று காலை இருவரும் தங்களது வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 சவரன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போயிருந்தன.
இதுகுறித்து டாக்டர் மலர்வண்ணன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வீடு முழுவதும் சோதனை செய்தனர். வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். டாக்டர் வீட்டில் 30 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம், அம்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.