தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வன்முறைகளுக்கு ஆளாவதால், அவர்களின் உடல் மற்றும் மன பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சுகாதாரத் துறை பணியாளர்கள் - காவல் நிலையத்தை நேரடியாக இணைக்கும் வசதியாக ’ஹாட்லைன் தொலைபேசி’ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இந்த "ஹாட்லைன்" வசதிகளை நிறுவ முடிவு செய்யப்பட்டு, அதில் 80 அரசு மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் தற்போது திருவள்ளூர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் உதவியுடன் அவசர அழைப்பு தொலைபேசி நிறுவப்பட்டுள்ளது.