தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளிய நெடுஞ்சாலைத் துறை - கண்ணீர் விட்ட பொதுமக்கள் - ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம்

பல ஆண்டுகளாக நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் ஆகியவற்றை நெடுஞ்சாலைத் துறையினர் அதிரடியாக நேற்று (ஜன.8) இடித்து அகற்றினர்.

highway department
highway department

By

Published : Jan 9, 2022, 6:25 AM IST

திருவள்ளூர்: வெங்கத்தூர் பஞ்சாயத்துக்குள்பட்ட பட்டறை பகுதி நெடுஞ்சாலை குறுகலாக உள்ளதால் தொடர் விபத்து ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரகாசன் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து அகற்றினர். இதில் பெரும்பான்மையான பகுதி, பாமகவை சேர்ந்த மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிபாபு வைத்திருந்ததாக நெடுஞ்சாலை துறையினர் கூறினர்.

அதேபோன்று குளக்கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் இருந்த 15 வீடுகளுக்கு பலமுறை முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டும் அங்கு வசிக்கும் மக்கள் இடத்தை காலி செய்யாமல் இருந்தனர். இதனால் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்க முயன்ற போது, குடியிருப்புவாசிகள் பொங்கல் பண்டிகை முடியும் வரை வீடுகள் இடிக்க கூடாது எனக் கேட்டகொண்டனர். இதனால் அலுவலர்கள், குடியிருப்புகளை இடிக்ககாமல் பத்து நாள் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.

குறிப்பாக திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார், டிஎஸ்பி சந்திரகாசன் மணவாள நகர் காவல் ஆய்வாளர் ஸ்டாலின் அந்தோணி ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: மாணவனை காதலித்த பெண் ஆசிரியர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details