திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் கண்ணபிரான் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். இந்த நாடகக் குழுவினர் எமதர்மன், சித்திரகுப்தன் போல் வேடம் அணிந்து வந்து தலை கவசம் அணியாமல் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களின் கழுத்தில் பாசக்கயிற்றை வீசி தலைகவசம் அணிய வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், கங்காதரன் ஆகியோர் தலைகவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவித்து அவர்களை எச்சரித்து அனுப்பினர். எமதர்மன், சித்திரகுப்தன் போல் வேடமணிந்து சாலையின் நடுவே நின்று அவர்கள் செய்த காட்சியை பொதுமக்கள் வியப்புடன் கண்டு தலைக்கவசத்தின் அவசியத்தை புரிந்து கொண்டனர்.