தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பலத்த மழையால் சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்னை வராது - திருவள்ளூரில் சராசரியாக 45.14 மில்லி மீட்டர் மழை

திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்து வரும் ஏழு மாதங்களுக்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முத்தையா தெரிவித்தார்.

thiruvallur
thiruvallur

By

Published : Nov 16, 2020, 8:23 PM IST

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றிரவு (நவ.15) முதல் பலத்த மழை பெய்தது.

செங்குன்றத்தில் 17 மில்லி மீட்டர், சோழவரத்தில் 15 மில்லி மீட்டர், பூண்டியில் 55 மில்லி மீட்டர் தாமரைப்பாக்கத்தில் 39 மில்லி மீட்டர், ஜமீன் கொரட்டூரில் 58 மில்லி மீட்டர், கும்மிடிப்பூண்டியில் 98 மில்லி மீட்டர், பொன்னேரியில் 79 மில்லி மீட்டர், திருவள்ளூரில் 63 மில்லி மீட்டர், ஆர்கே பேட்டை 29 மில்லி மீட்டர், பூந்தமல்லியில் 38 மில்லி மீட்டர், திருத்தணியில் 38 மில்லி மீட்டர், திருவாலங்காட்டில் 57 மில்லிமீட்டர், பள்ளிப்பட்டில் 35 மில்லி மீட்டர் ஊத்துக்கோட்டையில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

திருவள்ளூரில் சராசரியாக 45.14 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் தொடர் மழை காரணமாக வரும் தண்ணீர் ஆகியவை சேர்த்து இணைப்பு கால்வாய் வழியாக தற்போது பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்னை வராது

பூண்டி ஏரியில் மொத்தமுள்ள 35 அடி நீர் மட்டத்தில் தற்போது 28 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கத்தில் 20.7 அடி நீர்மட்டம் உள்ளது. அந்த நீர் மட்டம் 22 அடியாக உயரும்போது மாவட்ட ஆட்சியர் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என்றார்.

இதையும் படிங்க:'வேல் யாத்திரை மூலம் மக்களை மூளைச்சலவை செய்ய முடியாது!'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details