தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் விட்டுவிட்டு பெய்த கனமழை!

திருவள்ளூர்: திருவள்ளூரில் விட்டுவிட்டு பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

rain
rain

By

Published : Nov 25, 2020, 10:58 AM IST

திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நவ. 25) காலை முதல் விட்டுவிட்டு கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெரியகுப்பம், ஈக்காடு, காக்களூர், மணவாளநகர், பூண்டி, புல்லரம்பாக்கம், ஒதப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று (நவ. 24) மாலை முதலே கனமழை கொட்டி தீர்த்தது.

மேகம் சூழ்ந்ததால் மாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் விளக்கை ஒளிரவிட்டு வாகனத்தை ஓட்டி சென்றனர். கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்ப வேண்டும் என்றும், அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அனைத்து குளங்களும் நிரம்ப வேண்டும் என்றும் அப்போதுதான் விவசாயம் செழிக்கும் என்றும் பொதுமக்கள் வேண்டிக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details