தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் கொட்டித் தீர்த்த கனமழை

திருத்தணி பகுதியில் தொடர் கனமழையால் நெடியம் மற்றும் சானா குப்பம் ஆகிய இரண்டு கிராமங்களில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் கடும் அவதிக்குள்ளாகினர்.

திருவள்ளூரில் கொட்டித் தீர்த்த கனமழை
திருவள்ளூரில் கொட்டித் தீர்த்த கனமழை

By

Published : Oct 8, 2021, 1:01 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக கன மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரி குளங்கள் முழுமையாக நிரம்பின.

இந்நிலையில், நேற்று (அக்.7) காலை முதல் இரவு வரை பள்ளிப்பட்டு திருத்தணி அடுத்த சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்ததில், பள்ளிப்பட்டு பகுதியில் 15.5 சென்டி மீட்டர் மழை பதிவானது.

திருவள்ளூரில் கொட்டித் தீர்த்த கனமழை

மேலும் கிராமத்தில்‌ தொடர் கனமழையால் தாழ்வான பகுதி என்பதால் நெடியம், சானா குப்பம் கிராமங்களில் உள்ள பள்ளி வளாகம் மற்றும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கிராமங்களில் உள்ள மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:அண்ணாத்த இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details