தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் எதிரொலி: பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு! - திருவள்ளூர் மாவட்டச் செய்திகள்

திருவள்ளூர்: வடகிழக்குப் பருவமழைகாரணமாக பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

thiruvallur
thiruvallur

By

Published : Dec 1, 2019, 9:59 PM IST

வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழையால் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

திருவள்ளூரில் பெய்யும் கனமழை

இன்று காலை தொடங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது. செவ்வாப்பேட்டை, ஆவடி, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ஆரணி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் அதிகளவில் நிரம்பி வருவதால், நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை மழைப் பாதிப்பு - தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details