தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹிட் வெப்பநிலை காணப்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளிவர முடியாத அளவுக்கு வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளகினார்கள்.
திருவள்ளூரில் இன்று திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி! - திருவள்ளூர் மழை
திருவள்ளூர்: திருத்தணியில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று மாலை ஒரு மணி நேரம் விடாமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.
![திருவள்ளூரில் இன்று திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3191356-thumbnail-3x2-rain.jpg)
திருவள்ளூரில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி!
இந்நிலையில், இன்று திடீரென திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக விடாமல் மழைவெளுத்து வாங்கியதால். விவசாயிகள் உட்பட பொதுமக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூரில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி!