திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தனியார் தொழிற்சாலைகளில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கையால் இதுவரை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 54 ஆயிரத்து 296 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ராதாகிருஷ்ணன் விளக்கம் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 90 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதில் 12 ஆயிரத்து 320 பேர் பாதிப்பாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோழவரம், ஈக்காடு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் ஆயிரத்து 150 தொழிற்சாலைகளில் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.
அதில் 55 ஆயிரத்து 948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 ஆயிரம் பேர் பாசிட்டிவ் நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம், கையுறை அணியாமல் வெளியில் வர வேண்டாம்.
எப்போதும் தனித்திருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் கரோனா வைரஸ் தொற்றை ஒழிக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 5 முதல் ரேஷன் கடைகளில் மாஸ்க் வழங்கப்படும்' - அமைச்சர் காமராஜ்