தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டிற்குச் சென்று வந்தவரிடம் சுகாதாரத் துறையினர் சோதனை - திருவள்ளூர் மாவட்டச் செய்திகள்

திருவள்ளூர்: மூன்று மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்குச் சென்று வந்தவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கோட்டாட்சியர் தலைமையில் சுகாதாரத் துறையினர் சோதனை செய்தனர்.

foreign-return-in-thiruvallur
foreign-return-in-thiruvallur

By

Published : Mar 27, 2020, 8:19 PM IST

திருவள்ளூர் மாவட்ட நகராட்சிக்குட்பட்ட வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முகமது முத்து பாஷா என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தோனேஷியா சென்று வந்தார் என மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சோதனையின் போது

இதையடுத்து ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியரிடம் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார். பின்னர் கோட்டாட்சியர் சுகாதாரத் துறையினர் உடன் முகமது முத்து பாஷா வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதன்பின் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏழு பேரிடமும் கரோனா அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க:கரோனா அச்சம்: புதுக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details