உலகை உலுக்கும் கரோனாவால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. அதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் கடந்த மாதம் தொடங்கிய தர்பூசணி வியாபாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்தாண்டு தர்பூசணி விளைச்சல் அதிகளவில் இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கரோனா காரணமாக வாடிக்கையாளர்கள் இல்லாமல் வியாபாரம் நலிவடைந்தது. அதனால் அப்பகுதி தர்பூசணி வியாபாரிகள் நஷ்மடைந்துள்ளனர்.
பாதிப்படைந்த தர்பூசணி வியாபாரம்: நிவாரணம் வழங்க வியாபாரிகள் கோரிக்கை - கரோனா செய்திகள்
திருவள்ளூர்: கரோனா வைரஸ் காரணமாக தர்பூசணி வியாபாரம் பாதிப்படைந்துள்ளதால் அதற்கு நிவாரணம் வழங்க வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
harmful-watermelon
இது குறித்து ஊத்துக்கோட்டை தர்பூசணி விற்பனையாளர் ஆறுமுகம் கூறுகையில், இந்தக் கோடைகால சீசனில் 2.8 டன் பழத்தை விற்பனைக்காக வாங்கினேன். அவற்றில் வெறும் 100 கிலோ மட்டுமே விற்பனையான நிலையில், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விற்பனை முற்றிலும் சரிந்தது. எனவே, தமிழ்நாடு அரசு இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா: ஒருநாள் ஊதியம் வழங்கும் கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம்