தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலின ஊராட்சித் தலைவர் அவமதிப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் - tiruvallur dalit panchayat president file complaint prohibition of work

திருவள்ளூர்: பட்டியலினத்தைச் சேர்ந்த தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும், சாதி பெயரைச் சொல்லி தரக்குறைவாக பேசுவதாகவும் குறிப்பிட்டு குருவராஜ கண்டிகை ஊராட்சி மன்றத் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று (நவ.20) புகார் அளித்தார்.

குருவராஜ கண்டிகை ஊராட்சி மன்றத் தலைவர்
குருவராஜ கண்டிகை ஊராட்சி மன்றத் தலைவர்

By

Published : Nov 20, 2020, 11:22 AM IST

Updated : Nov 20, 2020, 12:51 PM IST

திருவள்ளூர் மாவட்டம் குருவராஜ கண்டிகை கிராம ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சி.ரவி, ஊராட்சி அலுவலகத்தில் அமர விடாமலும், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவிடாமல் தடுப்பதோடு வாா்டு உறுப்பினர்கள் தன்னை தரக்குறைவாக பேசுவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று (நவ.20) புகாா் மனு அளித்துள்ளாா்.

அந்த மனுவில்,”பட்டியலினத்தைச் சேர்ந்த நான் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து இருக்கையில் அமரவிடவில்லை. அப்பகுதி கவுன்சிலர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், அவருக்கு ஆதரவாக செயல்படும் நீலா, ராமகிருஷ்ணன் ஆகிய இருவார்டு உறுப்பினர்கள் என்னை தரையில்தான் அமர வற்புறுத்துகின்றனர்.

ஊராட்சித் தலைவர் அவமதிப்பு: வெளியான காணொலி

அரசின் திட்டப் பணிகளையும் செய்யவிடாமல் தடுப்பதோடு, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்”எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதி ரீதியாக தன்னை நெருக்கடிக்குள்ளாக்கும் மூவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர் ரவி கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க:திமுகவினர் அவமரியாதை: பட்டியலின ஊராட்சி தலைவர் தர்ணா!

Last Updated : Nov 20, 2020, 12:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details