தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மழை பெய்ய திருத்தணி மலையில் பூஜை செய்த குருஜி ரவிசங்கர் - Guruji Ravishankar Prayers for rain

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் மழை பெய்து தண்ணீர் பிரச்னை தீரவும் அயோத்தி விவகாரம் சுமூகமாக முடியவும் திருத்தணி முருகன் கோவிலில் குருஜி ரவிசங்கர் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்து, கலந்துகொண்டார்.

guruji-ravishankar

By

Published : Sep 16, 2019, 8:46 AM IST

திருவள்ளூர், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவர் முருகப்பெருமான் சன்னதியில் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சணை தீரவும் அயோத்தியில் நடைபெற்றுவரும் பிரச்னை சுமுகமான முறையில் முடியவும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் மழை பெய்ய திருத்தணி மலையில் பூஜை செய்த குருஜி ரவிசங்கர்

இந்த பூஜையை வாழும்கலை குருஜி ரவிசங்கர், ஏற்பாடு செய்து பூஜையில் கலந்து கொண்டார். இதில் முருகப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள், அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குருஜி ரவிசங்கர், வாழும் கலை அமைப்பினர் சார்பில், தாடூரில் தூர்வாரப்பட்ட ஏரி வாய்க்கால்களை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ABOUT THE AUTHOR

...view details